Tuesday, 12 March 2013

ஆரணி சாலையில் திமிரி


பிணிக்கொரு மாமருந்து இறைவனது திரு நாமத்தினை மறவாமல் தினமும் உச்சாடனம் செய்வதே!
 வேலூர் மாவட்டம் - ஆற்காடு  - ஆரணி சாலையில் திமிரி எனும் ஊர் உள்ளது!

இங்கு பழமை வாய்ந்த அருள்மிகு ஸோம நாதப் பெருமான் எனும் திருநாமத்துடன் தீராப் பிணி தீர்க்க இறைவன் குடிகொண்டுள்ள அற்புதமானதொரு திவ்யத் தலம்!

ஞாயிறு தினத்தன்று, காலை இறைவனுக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்! இவ்வாலய வழிபாடு முடித்து, அருகிலுள்ள அருள்மிடு வரதராஜப் பெருமானையும் அர்ச்சனை மற்றும் ஐந்து நெய் அகல் தீபமேற்றி வழிபடவும்!
மாலை இராகுகாலத்தில் ஸ்ரீசரபேஸ்வரையும் பைரவரையும் ஒரு நெய் அகல் தீபம் கொண்டு , ஒன்பது நெய் அகல் தீப விளக்கேற்றி, தங்களின் பிணி, தீரா எதிரித் தொல்லை , கடன் பிரச்னை , குடும்ப அமைதியின்மை -  குறித்து மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும்.

இவ்வாலய வழிபாடு முடித்து, அருகிலே பாஷாணலிங்கம் உள்ள சிவாலயம் உள்ளது. இங்கு வழிபட்டு, அபிஷேக நீரும் , தேனும் பெற்று அருந்திவர உங்களின் தீரா பிணிகள் தீரும்!



 ஸ்ரீசரபேஸ்வரர்!
ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:

பக்ஷீ சதுர் பாஹுக :
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர :
காலாக்னி கோடித்யுதி :
விச்வ ÷க்ஷõப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
பிரும்மேந்திர முக்யைஸ்துத :
கங்கா சந்தரதர : புரஸ்த சாப :
ஸத் யோரிபுக் னோஸ்து ந



சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என் முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.

மூல மந்திரம்

ஓம் கேம் காம் கம் பட் ப்ராணக்ர
ஹாஸி, ப்ராணக்ரஹாஸி
ஹும் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
சரப ஸாலுவாய பக்ஷிராஜாய ஹும்பட் ஸ்வாஹா

இவரை வழிபடுவதால் பேராபத்து, பூகம்பம், தீ விபத்து, மண்மாரி, இடி, புயல், மின்னல், பரிகாரம் காண முடியாத துன்பம், வைத்யர்கள் கைவிட்ட வியாதிகள், அபமித்யு, பைத்யம், விஷ பயம், பூதப் பிரேத பைசாஸம் இவைகளின் பயம், இவைகளிலிருந்து நிவிருத்தி கிடைக்கும் என்று வியாசர் குறிப்பிட்டிருக்கிறார்.

எவர் ஒருவர் லலிதா சகஸ்ர நாமத்தை பக்தியோடு ஒரு தடவை படிக்கிறாரோ அவருக்கு யார் சத்ருக்களோ அவர்களை சரப மூர்த்தி நாசம் செய்கிறார்.
சரபேஸ்வரரை ஞாயிற்றுகிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சமே. ஆகவே கால பைரவாஷ்டகத்தையும் அச்சமயம் கூறி வழிபடலாம்.

Saturday, 9 March 2013

இந்து மெய்ஞான மரபு!







இப்போது நாம் அடிக்கடிக் கேட்கும் ஒரு வரி உண்டு, இந்திய சிந்தனை என்று ஒன்று இல்லை. இந்து ஞான மரபு என்று ஒன்று இல்லை. அதெல்லாம் வெள்ளைக்காரன் வந்து உருவாக்கியது. பல தளங்களில் இந்த கூச்சல் எழுந்துகொன்டே இருக்கிறது. இந்தக் குரல் பெரும்பாலும் மேலை நாட்டு பல்கலை கழகங்களில் தயாரிக்கப்பட்டு நமக்கு அனுப்பப்படுகிறது … இந்தக்குரலை எவர் எதிரொலி செய்கிறார்களோ அவர்களுக்கே இந்தியாவில் இன்று வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். அவர்களை மேலைநாட்டு பல்கலைகள் அழைத்து கௌரவிக்கும். பட்டங்களும் நிதிக்கொடைகளும் அளிக்கும்…
உண்மையில் அப்படித்தானா? உதாரணமாக இந்து ஞான மரபு என்ற ஒன்று எப்போதிருந்து இருக்கிறது?..  நமக்கு எப்போது முதல் நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போது முதல் இதற்கு ஒரு பாடத்திட்டம் [கரிக்குலம்] தெள்ளத்தெளிவாகவே கிடைக்கிறது. இருந்ந்தும் இப்படி ஒரு அமைப்பே இல்லை என்று நம்மிடம் வாதிடுகிறார்கள் நம் அறிவுஜீவிகள்.
இந்த பாடத்கிட்டம் எல்லா இந்து ஞான வழிகளுக்கும் பொதுவானது. நீங்கள் திருவாவடுதுறை மடம் சென்று சைவம் கற்றாலும் சரி, அகோபிலம் சென்று வைணவம் கற்றாலும் சரி இதை கற்றாக வேண்டும். செவ்வியல் இலக்கியங்களை விடுங்கள், நாட்டுப்புற இலக்கியங்களில் கூட அப்படித்தான். ஒரு கதாநாயகன் சகல கலா வல்லவன் என்றால் உடனே அவன் இந்த பாடத்திட்டத்தை கற்றவன் என்பார்கள். நீங்களே கேட்டிருக்கலாம். சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள் – ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…” அதுதான் இந்து மெய்ஞான மரபு!
அந்த பாடத்திட்டம் இதுதான்.
1. வேதங்கள்
2. மூன்று தத்துவங்கள்: அதாவது பிரஸ்தான திரயம். கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம்.
3. ஆறு தரிசனங்கள்: சாங்கியம் யோகம் நியாயம் வைசேடிகம் பூர்வமீமாம்சம் உத்தர மீமாம்சம்
4 ஆறு மதங்கள்: சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணபத்யம் சௌரம்
இவற்றை எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு நூல்வரிசையாக எண்ணிவிடக் கூடாது.. ஒன்றுக்கு இன்னொன்றுடன் உள்ள உறவும் முரண்பாடும் முக்கியமானவை…