பிணிக்கொரு மாமருந்து இறைவனது திரு நாமத்தினை மறவாமல் தினமும் உச்சாடனம் செய்வதே!
வேலூர் மாவட்டம் - ஆற்காடு - ஆரணி சாலையில் திமிரி எனும் ஊர் உள்ளது!
இங்கு பழமை வாய்ந்த அருள்மிகு ஸோம நாதப் பெருமான் எனும் திருநாமத்துடன் தீராப் பிணி தீர்க்க இறைவன் குடிகொண்டுள்ள அற்புதமானதொரு திவ்யத் தலம்!
ஞாயிறு தினத்தன்று, காலை இறைவனுக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்! இவ்வாலய வழிபாடு முடித்து, அருகிலுள்ள அருள்மிடு வரதராஜப் பெருமானையும் அர்ச்சனை மற்றும் ஐந்து நெய் அகல் தீபமேற்றி வழிபடவும்!
மாலை இராகுகாலத்தில் ஸ்ரீசரபேஸ்வரையும் பைரவரையும் ஒரு நெய் அகல் தீபம் கொண்டு , ஒன்பது நெய் அகல் தீப விளக்கேற்றி, தங்களின் பிணி, தீரா எதிரித் தொல்லை , கடன் பிரச்னை , குடும்ப அமைதியின்மை - குறித்து மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும்.
இவ்வாலய வழிபாடு முடித்து, அருகிலே பாஷாணலிங்கம் உள்ள சிவாலயம் உள்ளது. இங்கு வழிபட்டு, அபிஷேக நீரும் , தேனும் பெற்று அருந்திவர உங்களின் தீரா பிணிகள் தீரும்!
ஸ்ரீசரபேஸ்வரர்!
ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:
பக்ஷீ சதுர் பாஹுக :
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர :
காலாக்னி கோடித்யுதி :
விச்வ ÷க்ஷõப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
பிரும்மேந்திர முக்யைஸ்துத :
கங்கா சந்தரதர : புரஸ்த சாப :
ஸத் யோரிபுக் னோஸ்து ந
சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என் முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.
மூல மந்திரம்
ஓம் கேம் காம் கம் பட் ப்ராணக்ர
ஹாஸி, ப்ராணக்ரஹாஸி
ஹும் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
சரப ஸாலுவாய பக்ஷிராஜாய ஹும்பட் ஸ்வாஹா
ஹாஸி, ப்ராணக்ரஹாஸி
ஹும் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
சரப ஸாலுவாய பக்ஷிராஜாய ஹும்பட் ஸ்வாஹா
இவரை வழிபடுவதால் பேராபத்து, பூகம்பம், தீ விபத்து, மண்மாரி, இடி, புயல், மின்னல், பரிகாரம் காண முடியாத துன்பம், வைத்யர்கள் கைவிட்ட வியாதிகள், அபமித்யு, பைத்யம், விஷ பயம், பூதப் பிரேத பைசாஸம் இவைகளின் பயம், இவைகளிலிருந்து நிவிருத்தி கிடைக்கும் என்று வியாசர் குறிப்பிட்டிருக்கிறார்.
எவர் ஒருவர் லலிதா சகஸ்ர நாமத்தை பக்தியோடு ஒரு தடவை படிக்கிறாரோ அவருக்கு யார் சத்ருக்களோ அவர்களை சரப மூர்த்தி நாசம் செய்கிறார்.
சரபேஸ்வரரை ஞாயிற்றுகிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சமே. ஆகவே கால பைரவாஷ்டகத்தையும் அச்சமயம் கூறி வழிபடலாம்.
சரபேஸ்வரரை ஞாயிற்றுகிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சமே. ஆகவே கால பைரவாஷ்டகத்தையும் அச்சமயம் கூறி வழிபடலாம்.
No comments:
Post a Comment