Sunday, 5 May 2013

மாந்தி உதயமாகும் நேரம்.

ஜோதிடத்தில் அவரவர் ஜென்ம ஜாதகத்தில் லக்னம் நீர் ராசிகளில் இருந்தால் ஜாதகர் குண்டாக இருப்பார். அவரது எடை சராசரி எடையை விட சுமர்ர் 10 முதல் 15 கிலோ எடை கூட இருக்கும்.

லக்னம் நீர் ராசியில் இருந்து, லக்னாதிபதியும் நீர் கிரகமாக இருந்தால் அவரது எடை சராசரி எடையை விட சுமார் 25 கிலோ முதல் 35 கிலோ வரை கூட இருக்கும்.

லக்னம் நீர் ராசியில் இருந்து, லக்னாதிபதியும் நீர் கிரகமாக இருந்து, அவரும் நீர் ராசியில் இருந்து, லக்னத்தில் மற்றொரு நீர் கிரகம் உட்கார்ந்து விட்டால் ஜாதகர் அவருடைய சராசரி எடையை விட சுமார் 35 கிலோவிற்கும் மேலாக இருப்பார்.

இப்படி பட்டவர்கள் ஜென்ம ஜாதகத்தில் எப்படியும் ஆறாமஇடமான வியாதி ஸ்தானம் பாதிக்க பட்டு இருக்கும். இதை போக்க சிலரால் முடியும், இதுவும் அவரவர்கள் ஜாதகத்தில் வழியும் தெரியும்




மாந்தி உதயமாகும் நேரம்.

மாந்தி என்கின்ற குளிகன் ஒவ்வொரு நாளும் கிழமையை பொறுத்து வானவீதியில் உதயமாவதாக கூறப்படுகிறது.அந்த நாழிகையில் கிழ்வானத்தில் உதயமாகும் லக்னம் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியில் மாந்தி நிற்பதாக கூறப்படுகிறது.
உதாரணம் திங்கட்கிழமை ஒரு குழந்தை பகலில் பிறந்ததாக கருதினால், அன்று பகல் 22 நாழிகைக்கு மாந்தி கிழ்வானத்தில் உதயமவதாக கருதபடுகிறது. அந்த 22 நாழிகையை உதயாதி நாழிகை போல் பாவித்தால் எப்படி லக்னம் நின்ற ராசி அமைப்போமோ அந்த விதமாகவே குளிகன் @ மாந்தி நின்ற ராசியை காணவேண்டும்.
மாந்தி ஒவ்வொரு கிழமையும், பகலில் ஒரு நேரத்திலும், இரவில் ஒரு நேரத்திலும் உதயமாகிறார். அதர்கூரிய அட்டவணை உள்ளது. அதன் படி பார்த்து நாம் கணக்கிட வேண்டும்.
கிழமை. பகல் அல்லது இரவு உதயமாகும் நாழிகை.

ஞாயிறு பகல் 26
இரவு 10

திங்கள் பகல் 22
இரவு 6
செவ்வாய் பகல் 18
இரவு 2

புதன் பகல் 14
இரவு 16

வியாழன் பகல் 10
இரவு 22

வெள்ளி பகல் 6
இரவு 18

சனி பகல் 2
இரவு 14

இரவு நாழிகை கணக்கு போட வேண்டுமாயின் கொடுக்கப்பட்ட நாழிகையுடன் அன்றைய அகஸ் பொழுதை கூட்டிக்கொள்ளவேண்டும்.
மாநதியின் உதயத்தை பார்ப்பது போலவே, எமகண்டன்,அர்த்தபிரகரணன், காலன் போன்றவர்களின் உதய அட்டவணை உள்ளது.

No comments:

Post a Comment