Saturday, 23 February 2013
Tuesday, 19 February 2013
, துவாரகை
5200 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய.. கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை இருந்தது உண்மை தான்!
ராமர் கட்டிய சேது பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இருப்பதைப் போல, மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
தொல்லியல் ஆராய்ச்சி: இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்த மண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன.
மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குரு÷க்ஷத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன.
துவாரகாநாத்ஜி மந்திர்: துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார். கண்ணனின் எட்டு துணைவியர் (அஷ்ட மகிஷிகள்), அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம்.
17முறை போக்: துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை உணவு படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும். கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர்.
இருப்பிடம்: குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 455 கி.மீ.
குறிப்பு :-
பிரபாகரனின் செல்ல மகளின் பெயர் துவாரகா
இமயம் முதல் ஈழம் வரை ஒரே நாடு இந்து நாடு.
தெரிந்துகொள்வீர் பிரபாகரன் ஒரு இந்து வீரன் .!!

Monday, 18 February 2013
. ஐந்தெழுத்து என்பது ந-ம-சி-வ-ய என்ற ஐந்துமாகும்.
. ஐந்தெழுத்து என்பது ந-ம-சி-வ-ய என்ற
ஐந்துமாகும்.
எண்களைப் பயன்படுத்திக் கருத்துகளை விளக்குவதும் செய்திகளை விளக்குவதும் சித்தர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. கீழ்வரும் சிவவாக்கியர் பாடலைக் கவனியுங்கள்.
அஞ்செழுத்திலே(1) பிறந்து அஞ்செழுத்திலே(2) வளர்ந்து
அஞ்செழுத்திதை(3) ஓதுகின்ற பஞ்ச(4)பூத பாவிகாள்
அஞ்செழுத்தில்(5) ஓரெழுத்தை அறிந்துகூற வல்லிரேல்
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (பா.20)
இந்தப்பாடலில் ஐந்து (அஞ்சு) என்ற எண் ஐந்து முறை இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பொருள்களில் வந்திருக்கிறது. முதலாவது “அஞ்சுக்கு” ஐந்து புலன்கள் அல்லது ஐந்து கோசங்கள் என்று பொருள். இரண்டாவது “அஞ்சுக்கு” ஐந்து பிராணன்கள் என்று பொருள். மூன்றாவது “அஞ்சுக்கும்” ஐந்தாவது “அஞ்சுக்கும்” ஐந்தெழுத்து மந்திரமான பஞ்சாட்சரம் என்று பொருள். நான்காவது “அஞ்சுக்கு” ஐந்து பூதங்கள் என்று பொருள். ஐந்தெழுத்தையும் ஐம்பதெழுத்தையும் சமம் என்கிறார் திருமூலர். (மந்திரம்.2698) இதில் ஐம்பது என்பது குண்டலினி ஆற்றல் பலவேறு சக்கரங்களைக் கடக்கும்போது கேட்கிற பல்வேறு ஒலிகள் ஆகும். இந்த ஐம்பது ஒலிகளும் ஐம்பது எழுத்துகளாகும். ஐந்தெழுத்து என்பது ந-ம-சி-வ-ய என்ற ஐந்துமாகும்.

Saturday, 16 February 2013
இந்த "ஓம்-நமோ-நாராயணாய", உலகத் தாலியை விட உறுதி மிக்கது!
சரி.....உடையவர் கோபுரத்தில் இருந்து சொன்னது தான் என்ன? அவர் வாயாலேயே நாம் கேட்க வேண்டாமா?
.
.
.
எங்கே, உங்கள் காதுகளையும், கண்களையும், உள்ளத்தையும்.....இனி உடையவரிடம் கொடுங்கள்!இதோ...உங்கள் உள்ளத்திலே...இராமானுசர் கையொப்பமிட்டு...பேசத் துவங்குகிறார்!
"அன்பர்களே, ஆசை உடையோர் எல்லாரும் ஓடி வாருங்கள்!
உழன்றும் உழவே தலை என்று தலையாய இருக்கும் நீங்களா இன்னும் உழன்று கொண்டிருப்பது? இதோ, கேளுங்கள்....* உங்கள் அனைவருக்கும் சம உரிமையுள்ள, மந்திரப் பொருள் இதுவே!
* நம் அனைவருக்கும் பொதுச் சொத்தான மந்திரப் பொருள் இதுவே!
நீங்கள் இதைத் தனியாக எங்கு போய்ப் படிப்பீர்கள்? படிக்க, பக்கம் நின்று கேட்டாலே போதும்! பரிந்து உள் உணர்ந்தாலே போதும்!
அதனால் "தெரிந்து/அறிந்து" வைத்துக் கொள்வதை விட, "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்!
கவனமாகக் கேட்டு, ஆராத ஆசையுடன், "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்! "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்!
----------------------------------------------------------------------------------------------------

* ஓம் என்றால் அ-உ-ம்! = அவன்-உறவு-நாம்!
* அ = அனைத்துக்கும் முதல் = அகர முதல = இறைவன்!
* ம் = நாம்!
* உ = உறவு!
அவன் எங்கோ இருக்கிறான், தவம் செய்தால் மட்டுமே அடைய முடியும் என்று நினைத்து விடாதீர்கள்! பெற்றவளைக் காணத் தவம் செய்ய வேணும் என்றில்லை!அவனுக்கும்-நமக்குமான உறவு "என்றும்" இருக்கிறது! அதை அவனே நினைத்தாலும் ஒழிக்க முடியாது!
அவனுக்காகவே நாம்! நமக்காகவே அவன்!
# அதனால் "பய பக்தியில்" பயத்தை விட்டு விடுங்கள்! பத்தியைக் கைக் கொள்ளுங்கள்! ப்ரபத்தியைக் கைக்கொள்ளுங்கள்!
# "நம் வீட்டிலே அவனும் ஒருவன்" என்று அனுதினமும் அவனோடு உறவு கொள்ளுங்கள்! உறவு கொள்ளுங்கள்! = அது தான் ஓம்!
----------------------------------------------------------------------------------------------------

* நமோ என்றால் ந-ம = எனதில்லை! எனது இல்லவே இல்லை!
# எல்லாம் எனக்குக் "கொடுக்கப்பட்டது"! எல்லாமே வாடகைப் பொருள்!
அதற்காக எல்லாத்தையும் விட்டுறச் சொல்லலை! அவற்றுக்கு நிரந்தர மதிப்பைக் கொடுக்காமல், தற்காலிக மதிப்பைக் கொடுங்கள், போதும்!
உலகம் மாயை அல்ல!
உலகம் உண்மை! நீங்களும் உண்மை!
# ஆசையை விட்டு விட எல்லோராலும் முடியாது! ஆசையை ஒழிக்க முயலாதீர்கள்! ஆசையை வையுங்கள்! :)
ஆனால் எங்கே? = அவன் திருமேனி மீது "அதிக" ஆசை வைத்து விடுங்கள்!
அங்கு அதிகம் வைத்து விட்டால், மற்ற "ஆசை"களால் உங்களை "அசை"க்க முடியாது!
ந-மோ = நான் எனக்குச் சொந்தம் இல்லை! நான் அவனுக்கு மட்டு"மே" சொந்தம்!
----------------------------------------------------------------------------------------------------

* நாராயணாய என்றால் நமக்கு அவனே தஞ்சம்! அவனுக்கு நாமும் தஞ்சம் = அதுவே நாரா + அயண!
வேறு உபாயங்கள் நடுவில் உள்ளனவா? = இல்லை! இல்லவே இல்லை! அவ"னே" தஞ்சம்!
அதான் வெறுமனே "நாராயண" என்று சொல்லாது, "ஆய" என்பதை உடன் சேர்த்து
= நாராயண-"ஆய"! அவ"னே" தஞ்சம்!
நாரணம் = நாரம் என்றால் நீர்! அணம் என்றால் அருகில்! அவன் "நீர்-மைக்கு அருகில் நாம் எல்லாரும்!
# அவன் நீரைப் போல! = நீர் இன்றி அமையாது உலகு!
# அவன் நீரைப் போல! = எதில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தைக் கொள்வான்!
# அவன் நீரைப் போல! = கீழ் நோக்கியே இறங்கி வருவான்!
நீரே உணவாகவும் இருக்கும்! மற்ற உணவையும் அதுவே விளைவிக்கும்! அது போல் காரணமும் அவனே! காரியமும் அவனே!
அவன் தொலைவில் இருக்கிறவன் என்று பூஜைகளோடு மட்டும் ஒதுக்கி வைத்து விடாதீர்கள்!
அவன் நம்மில் ஒருவன் என்று அனுதினமும்...அவனோடு உறவு கொள்ளுங்கள்! உறவு கொள்ளுங்கள்!
அந்த உறவு தான் பலம்! இன்பம்! நிம்மதி! எல்லாம்!
பொதுவாகத் தாலிச் சரட்டில், 8 இழைகள் - 2 சரடாய் இருக்கும்! 8x2=16
ஆனால் இந்த "ஓம்-நமோ-நாராயணாய", உலகத் தாலியை விட உறுதி மிக்கது!
8 எழுத்து x 3 பதம் = 8 இழைகள் x 3 சரடுகளாய்,
8x3=24...இன்னும் இறுக்குகின்றது! உங்களை அவனோடு இறுக்குகின்றது!
ஓம் + நமோ + நாராயணாய
* நம்மை அவனுக்கு மட்டு"மே" கட்டி வைத்துள்ள திருமாங்கல்யம்!
* அவனையும் பிடித்து, நம்மிடத்தில் உறவு ஏற்படுத்தி விட்ட திருமாங்கல்யம்!
பிறவிகள் தோறும் உலகத் தாலி மாறி விடும்! ஆனால் இந்தத் தாலி மட்டும் என்றும் மாறவே மாறாது! என்றும் கூடவே வரும்! எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து!
எங்கே.......
திருக்கோட்டியூர் நம்பிகளின் சீடன்,
அடியேன் இராமானுசனுடன் எல்லாரும் சேர்ந்து...
இந்தப் பெரிய திருமந்திரத்தை,
நாடும் நகரமும் நன்கறிய...
சொல்லும் போது...வெறுமனே வாய் அளவில் சொல்லாமல்...
* தாலிச் சரட்டை மனசாரத் தொட்டுக் கொள்ளுங்கள்!
* உறவு, உறவு, உறவு என்று நினைத்துக் கொண்டு,
எல்லாரும் மூன்று முறை சொல்லுங்கள்!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
(நிறைவு)

குலம் தரும்! செல்வம் தந்திடும்!
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும்! நீள்விசும்பு அருளும்!
அருளொடு பெருநிலம் அளிக்கும்!
வலம் தரும்! மற்றும் தந்திடும்!
பெற்ற தாயினும் ஆயின செய்யும்!
நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன்,
(ஓம் நமோ Dash, இது தான் அந்த Dash...)
நாராயணா என்னும் நாமம்!
திருமாங்கல்ய தாரண காரண - பெரிய திருமந்திர - விவரண அவதாரிகை சம்பூர்ணம்!

இத்துடன்....மாதவிப் பந்தலில்,
* ஓம் (அ-உ-ம்) என்பதற்கான விளங்கங்களும் - 1, 2, 3
* நமோ என்பதற்கான விளக்கங்களும் - 1, 2
* நாராயணாய என்பதற்கான விளக்கங்களும் - 1, 2, 3, 4, 5
நிறைந்தே நிறைவானது! மாதவிப் பந்தலும் நிறைவானது! "நிறைந்தேலோ" ரெம்பாவாய்!
புகுந்த வீட்டில் புகுந்தாலும், சில அதீத அன்புள்ள பெண்கள், பிறந்த கிராமத்தையே மனத்தளவில் சுவாசித்துக் கொண்டு இருப்பார்கள்!
அது போலத் தான், பந்தலின் சுவாசத்தில், துளசீ மணமே அதிகம் கமழ்ந்து கொண்டு இருந்தது!
ஆனாலும், எங்கள் குல தெய்வம், தமிழ்க் கடவுள், அடியேன் இள வயதில் புகுந்த பிரான்,
என் முருகப் பெருமானிடத்திலே.....
இது வரை வந்த பந்தல் பதிவுகளையும், அடியார் கைங்கர்யத்தையும், இனி-தே ஒப்புக் கொடுத்து விடுகிறேன்!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி, நாடி நான் கண்டு கொண்டேன் நாரணா என்னும் நாமம்!
காதல் என் பெருமானே,
"உன் தனக்கு-நான்"
என்று "எழுதப்பட்ட" அந்நாள்!
உனக்கே நான் ஆட்செய்வேன்! உனக்கே நான் ஆட்செய்வேன்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
காதலால்...
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!

1. ஓம் (1)
2. ந-மோ (2)
3. நா-ரா-ய-ணா-ய (5)
* இந்தப் பெரிய திருமந்திரமே = "உங்கள்-அவன்" உறவுக்கான தாலிச் சரடு! திருமாங்கல்யம்!2. ந-மோ (2)

- உன் இதய வாசல்படி, மாதவிப் பந்தல்!
, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.
வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?
கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.
முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.
அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?
அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!
அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :-)

வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...
யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!
அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா!
இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!
அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார்.
அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம்.
இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.
எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!
கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-)
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!
பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர்,
கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக,
திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!
அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்....
அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா....தெரியவில்லை!
எது எப்படியோ.....
அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!
வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!
Posted by kannabiran, RAVI SHANKAR (KRS)
சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு, மற்றோர் சாதி என்று ஒழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருக, செய்த தகவினுக்கு இல்லை கைம்மாறு, என்று
கோதில் வாய்மையினா லொடும், "உடனே உண்பன் நான்" என்ற ஓண்பொருள், எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை அடைந்தேன், அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
- திருமங்கை ஆழ்வார்! பெரிய திருமொழி! (1419)
இலங்கையில் இருந்து அயோத்திக்கு ஜெட் வேகத்தில் திரும்புகிறது விமானம்!
இராகவன்-சீதையொடு, இலக்குவன், சுக்ரீவன், வீடணன், அனுமன் முதலானோர்! வழியில் பரத்துவாச முனிவரின் குடில்!
அவரோ நிலைமை புரியாமல், இராமனைக் குடிலுக்கு விருந்துண்ண அழைக்கிறார்! முணுக் எனக் கோபிக்கும் முனிவரிடம் விளக்கி மாளுமோ?
அங்கே பரதன் குறித்த காலத்தில் வராவிட்டால் தற்கொலை என்று இருக்கிறான்! என்ன செய்வது? யார் உதவிக்கு? = எப்போதும்! முப்போதும்!
ஆவி காத்து இருப்பது ஒரேயொரு அடியவன் தான்! எப்போதும், முப்போதும்!
* தற்கொலையில் சீதையின் ஆவி காத்தான்!
* போரிலே இலக்குவன் ஆவி காத்தான்!
* மாயத்தில், இராமனின் ஆவி காத்தான்!
* இதோ, பரதனின் ஆவியும் காத்தான்!
ஆவி காப்பான் எம் ஆஞ்சநேயன்!
சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!
அன்று, அவள் ஆவி காத்தது போல்,
அல்லற்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீரில்,
என்னையும் காத்தருள்!
'அவனுக்கு என்னை விதி' என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு!

கணவன் உண்ட இலையில் மனைவி உண்பது,
மனைவி உண்ட இலையில் கணவன் உண்பது
- இதெல்லாம் ஒரு அது! ஒரு இது! ஆசை!:)
ஆனா சினிமாவில் பார்த்துப் பார்த்து, அப்படிச் சாப்பிட்டாலே அது மனைவி தான் என்று முடிவு கட்டி விட்டோம்!
முத்தம்-ன்னாலே காதலர்கள் குடுப்பது தானா? என் காதல் முருகனுக்கு சதா முத்தம் குடுக்கும் நான், அதே சமயம் தோழி கோதையின் கைகளிலும் முத்தம் கொடுத்து இருக்கேனே! :)
அது போல ஒரே இலைச் சாப்பாடு என்பது ஒரு நெருக்கம்! அதன் நோக்கத்தைத் தான் பார்க்கணும்! தாறு மாறா யோசிக்கப்பிடாது!:)
சின்ன வயசு இராமானுசர், மூத்த குருவான திருக்கச்சி நம்பிகள் உண்ட இலையில் உண்ண ஆசைப்பட்டார்!
ஏன்? = ஏன்-னா சடங்கு சாஸ்திரம்-ன்னே இருந்த அவருக்குள், ஆழ்வாரின் ஈரத் தமிழை முதலில் விதைத்தது நம்பிகளே!
ஆனால் நம்பியோ so called தாழ்ந்த குலத்தவர்!
தமிழ்ப் பாட்டு பாடித் திரிபவர்! கன்னங் கரேல்!
'அந்தாளு' உண்ட இலையில் நம்ம புருஷன் இராமானுசரா? சீச்சீ! எங்கும் கேட்டிராத புதுப் பழக்கமான்னா இருக்கு? என்ன காரியம்-ண்ணா பண்றேள்?
இராமானுசரின் மனைவிக்கு இது பிடிக்காமல் போய்...எதை எதையோ செய்ய..., அவர்களின் மண முறிவுக்கான வித்து இங்கு தான் ஆரம்பம்!
பின்னர் கிணற்றடியில், பெண் என்ற தன்மையும் மீறி, தகாத வார்த்தைகளைக் கொட்டி, மொத்தமாய் முறிந்து போனது!
நாம மேட்டருக்கு வருவோம்! ஒரே-இலை உணவு என்பது குழந்தை உணவை அம்மா/அப்பா எடுத்து உண்பதும் கூட உண்டு!
இங்கே இராகவனுடன் ஒரே இலை உணவு!
சொல்வது ஆழ்வார் பாசுரம்!
அதைத் தான் ஓவியமா வரைஞ்சி இருக்கார் வினு!

Friday, 15 February 2013
செவ் அக்னிதத்துவ ராசி
செவ்வாய்க்கு ஏன் இந்த முக்கியத்துவம்னு சொல்லிக்கிட்டு வரேன். செவ் பலமில்லாதவுகளால – செவ் பலமில்லாதவுகளுக்கு என்னென்ன இம்சை எல்லாம் ஏற்படுதுன்னு சொல்லிக்கிட்டு வரேனில்லையா. அதுல மிச்சம் மீதிய இன்னைக்கு பைசல் பண்ணிருவம். அதுக்கு பிறவு தீர்வுகளை பார்ப்போம்.
கூலிப்படைகள்:
செவ் அக்னிதத்துவ ராசி. அக்னியோட இயல்பு மேனோக்கி பாயறது. ஒரு தீப்பந்தத்தை தலைகீழா பிடிச்சாலும் ஜுவாலை மேல் நோக்கி தான் திரும்பும்.
செவ் அக்னிதத்துவ ராசி. அக்னியோட இயல்பு மேனோக்கி பாயறது. ஒரு தீப்பந்தத்தை தலைகீழா பிடிச்சாலும் ஜுவாலை மேல் நோக்கி தான் திரும்பும்.
செவ் பலம் உள்ளவன் மைண்ட்ல ஒரு நம்பிக்கை இருக்கும். பொறுமை இருக்கும். என்னைக்கோ ஒரு நாள் மேலுக்கு வந்துருவம்ங்கற உள்ளுணர்வு இருக்கும். அதனால அவன் லீகல் மெத்தட்ஸ்ல ,மோரலோட மேலுக்கு வர பார்ப்பான்.
ஆனால் செவ் பலமில்லாதவனுக்கு மைண்ட்ல அவ நம்பிக்கை இருக்கும். தாழ்வு மனப்பான்மை இருக்கும். நாம ஏமாந்தா தரையோட தரையா தேச்சு அரக்கிருவானுவங்கற பதட்டம் இருக்கும். இப்ப விட்டா எப்பவும் மேலுக்கு வரமுடியாதுங்கற பரபரப்பு இருக்கும்.
இப்படியா கொத்தவுக தான் இல்லீகல் மெத்தட்ஸுக்கு டைவர்ட் ஆயிர்ராய்ங்க. மொதல்ல அவனை இவனை வெட்டுவான்.ஆனால் இது இவன் வெட்டப்படறதுக்கு காரணத்தை உருவாக்கத்தேங்கறது அவனுக்கு தெரியாதுல்ல.
மேலும் செவ் கௌமார தசைக்கு காரகன்.அதாவது இளமை காலத்தை ரெம்ப எஃபெக்ட் பண்ணுவார். இன்னைக்கு கூலிப்படையில உள்ளவுக மெஜாரிட்டி மீசை கூட சரியா முளைக்காதவுக தான்.
ரத்தசோகை ,ரத்தக்கொதிப்பு:
செவ் ரத்தத்துக்கு காரகன்.செவ் கெட்டா ரத்தசோகை ,ரத்தக்கொதிப்பு வர்ரதெல்லாம் சகஜமப்பா.. இதையெல்லாம் கண்டுக்காம விட்டுட்டா இதய நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக்ல முடியவும் வாய்ப்பிருக்கு.
செவ் ரத்தத்துக்கு காரகன்.செவ் கெட்டா ரத்தசோகை ,ரத்தக்கொதிப்பு வர்ரதெல்லாம் சகஜமப்பா.. இதையெல்லாம் கண்டுக்காம விட்டுட்டா இதய நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக்ல முடியவும் வாய்ப்பிருக்கு.
மூலம்:
உராய்வின் போது / இயக்கத்தின் போது வெப்பம் உண்டாகும் இது பொதுவிதி. நம்ம பாடியிலயும் எத்தனையோ இயக்கங்கள் அதனால வெப்பம் ஏற்படுது. கொழுப்பு எரிக்கப்படுவதால் வெப்பம் ஏற்படுகிறதுங்கறாய்ங்க.
உராய்வின் போது / இயக்கத்தின் போது வெப்பம் உண்டாகும் இது பொதுவிதி. நம்ம பாடியிலயும் எத்தனையோ இயக்கங்கள் அதனால வெப்பம் ஏற்படுது. கொழுப்பு எரிக்கப்படுவதால் வெப்பம் ஏற்படுகிறதுங்கறாய்ங்க.
ஹ்யூமன் பாடி ஒரு அற்புதமான தானியங்கி இயந்திரம். உடல் வெப்பம் அதிகரிக்கும் போது அதை குறைப்பதற்கான ஏற்பாடு பாடியில இருக்கு.. இல்லேங்கலை. ஆனால் இதையும் மீறி வெப்பம் அதிகரிக்கும் போது ………?
உணவுகளில் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளும் உண்டு.வெப்பத்தை தணிக்கும் உணவுகளும் உண்டு. பாடியிலயும் ஹீட்டு ,கூல் உண்டு.
இது மட்டுமில்லிங்ணா உணர்வுகளுக்கும் பாடியோட டெம்பரேச்சரை பாதிக்கிற நேச்சர் உண்டு. முக்கியமா கோபம் அதிகரிக்கும் போது டெம்பரேச்சர் எகிறிக்கும். ( நமக்குன்னா கீழ இருந்து மேல வரை காய்ஞ்சுரும். கண்ணெல்லாம் பொங்கும். ) இன்னொரு சந்தர்ப்பத்துலயும் எகிறிக்கும்.அது என்னனு சனத்துக்கு தெரியும்.
அந்த மேட்டர்ல க்ளைமேக்ஸ்ல இரட்டிப்பா கூல் ஆயிரும். நோ ப்ராப்ளம்.
அந்த மேட்டர்ல க்ளைமேக்ஸ்ல இரட்டிப்பா கூல் ஆயிரும். நோ ப்ராப்ளம்.
அல்லாபத்தியில சூடு,சீதளம்லாம் இல்லைம்பாய்ங்க. இதுக்கெல்லாம் கண்ணதாசன் ஏற்கெனவே பதில் சொல்லியாச்சு. அதனால நாம அம்பேல்.
சாதாரணமா செவ் பலமில்லாத ஜாதகர்கள் அவசரக்குடுக்கைகளா இருப்பாய்ங்க. இது அவிக உணவெடுக்கும் முறையிலும் பிரதிபலிக்கும். லபக்கு லபக்குன்னு விழுங்கிருவாய்ங்க. ( நொறுங்க தின்றால் நூறு வயது)
நொறுங்க தின்னாலுமே வவுத்து பகுதியில வெப்பம் உருவாகும். இதுல அள்ளி தின்னா எந்த அளவு உருவாகும்?
மேலும் இவிகளுக்கு வன்முறையில விருப்பம் இருக்கும். இது மாமிச உணவுகளின் மீது விருப்பமாக வெளிப்படும். கோழி ,ஆடுல்லாம் ஹீட்.
பூமிக்கடியில விளையற பொருட்கள் உடல் உஷ்ணத்தை எகிறச்செய்யும். செவ் பூமிகாரகனில்லையா.. அதனால செவ் பலமில்லாத ஜாதகர்கள் தங்களில் இல்லாத தாதுக்கள் கிடைக்கும்ங்கற உள்ளுணர்வுல இந்த உணவுகளை அதிகம் சுவைக்கலாம்.
இது போன்ற பல காரணங்களால் மூலம் (பைல்ஸ்) ஏற்பட வாய்ப்பிருக்கு.
கருக்கலைப்பு -கருச்சிதைவு:
கரு கலையவோ ,சிதையவோ மெடிக்கலா பல காரணங்கள் இருக்கலாம். அந்த காரணங்களுக்கு பிள்ளையார் சுழி போடறதென்னவோ செவ்வாய் பலமின்மையால் ஏற்படும் ரத்த சோகை , ரத்த கொதிப்பு, அதி உஷ்ணம் , கோபம் , அதி .. காரம் ( அதாங்க காரம் அதிகமா சேர்த்துக்கறது)
கணவன் மனைவி இடையிலான விவகாரங்கள் கொலையில் முடிவது:
செவ்வாய் மட்டுமில்ல மற்ற எட்டு கிரகங்களும் கூட கணவன் மனைவி இடையில பிரச்சினைகளை உருவாக்கலாம். கொலை ரேஞ்சுக்கு கொண்டு போறது மட்டும் செவ்வாய் தான். (கமுக்கமா விசம் வச்சு காரியத்தை முடிக்கறதுல ராகு -கேதுக்கள் பெசலிஸ்டுங்க )
அது ஏன்?
சூரியன்னா ஈகோ. மனைவி உங்க ஈகோவை சீண்டறாய்ங்கன்னா நீங்க அவிக ஈகோவை சீண்டலாம். சந்திரன்னா மனம் . மனைவி உங்க மனசை நோகடிச்சா நீங்க அவிக மனசை நோகடிக்கலாம். Tit for Tat !
ஆனால் செவ்வாயை பொருத்தவரை ஒரு வித்த போரை துவக்கி வச்சுருவாரு. (யுத்தகாரகன்) இத்தனாம்பெரிய தொடரை செவ் பத்து எளுதிக்கிட்டிருக்கம் . ஸ்போர்ட்ஸுக்கும் செவ் தான் காரகன்னு சொன்னேனா இல்லையா தெரியலை.
மொத உலக யுத்தம் ஆரம்பிக்க ஒலிம்பிக்சை பார்க்க போன ஆஸ்திரிய இளவரசர் கொல்லப்பட்டதுதான். விளையாட்டே யுத்தத்துல முடியறப்போ .. யுத்தம் கொலையில முடியறதெல்லாம் சகஜமப்பா.
ஒரு ஆண் பெண் செக்ஸ்ல ஈடுபடறாய்ங்கன்னா ஒருத்தர் மேல அடுத்தவருக்கு கொலை வெறி இருக்குன்னு அருத்தம். ஸ்தூலமா நடக்கிறது உடலுறவுன்னாலும் – சைக்கலாஜிக்கலா நடக்கிறதென்னவோ கொலை தான்.
உடலுறவு ஆழமானதாக – இருவரும் சம காலத்தில் உச்சம் பெறுவதாக அமைந்துவிட்டால் கொலை உடலுறவிலேயே அரங்கேறிவிடும்.பிரச்சினையே இருக்காது.
ரத்தம் கெட்டு இருப்பதாலோ -உஷ்ண கோளாறுகளாலோ உடலுறவில் சிக்கல் ஏற்பட்டு அரைகுறையாக முடிந்தால் கொலை வெறி மிச்சமிருக்கும். யுத்தம் துவங்கிரும். யுத்தம் கொலையில் முடியும்.
உடலுறவும் ஒரு யுத்தம் தான்:
யுத்தத்துல எப்படி வியூகங்கள் இருக்குமோ உடலுறவிலும் வியூகங்கள் உண்டு. முதலில் கண்களால் , உடல் வெப்பத்தால் , பேச்சால் துவக்கபப்டனும்.
பிறகு லேசான தொடுகை ,தடவல்,உரசல் , முற்றுக்கை , கோட்டை கதவை உடைத்தல் ,படை உட்புகுதல் இப்படி எல்லாமே ஒரு யுத்தம் போல தான் நடக்கனும். ஒரு வியூகப்படி நடக்கனும்.
செவ் பலமில்லாத ஜாதகர் என்னத்தை கிழிக்க முடியும்?
எனவே உடலுறவில் கொலை வெறி ,வன்முறை தாகம்லாம் தீரவே தீராது. குடும்ப வாழ்வில் வெடிக்கும்.
கள்ள தொடர்புகள் காரணமாய் கொலைகள்:
ஒரு கணவன் -மனைவி – அவிகளுக்கு இடையில “எல்லாம்” பர்ஃபெக்டா நடக்குதுன்னு வைங்க . எல்லாம்னா உடலுறவு – உட்பட.
அந்த கணவனோ மனைவியோ இன்னொரு உறவை தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லை. அட .. அப்படியே தேடிப்போறாருன்னு வைங்க.
அடுத்தவருடைய உணர்ச்சி எப்படி இருக்கும்? கோபம் வருமா? ஊஹூம்.. எல்லாம் பர்ஃபெக்டா தானே இருந்தது .ஏன் இப்படிங்கற கழிவிரக்கம்தான் தோணும். ச்சீன்னு ஆயிரும்.
இதே மேற்படி சோடியின் இடையில் எதுவுமே பர்ஃபெக்டா நடக்கலை. முக்கியமா தாம்பத்யத்துல குறை இருக்கு. இன்னொரு தொடர்பை தேடிப்போறாய்ங்கன்னா என்னா ஆகும்?
இருட்டுல நடந்த/ நடக்காத மேட்டரை வெளிச்சத்துக்கு கொண்டுவர்ரியாங்கற ஆத்திரம் பிறக்கும். இது ஏறக்குறைய கொலை. கொலைக்கு ரியாக்சன் என்ன ? கொலை தானே..
Thursday, 14 February 2013
சகஸ்ராரமே பிந்துஸ்தானம்
இந்தப் படத்தை ஒரு நண்பரின் முகநூல் பக்கத்தில் பார்த்தவுடன் தியானம் பற்றிய சில தகவல்கள் நினைவுக்கு வந்தது. மனதை அடக்குவது என்பது இயலாத காரியம். அதன் வேகத்தை திசை திருப்புவது அல்லது அதன் நோக்கத்தை மாற்றுவது என்று சொல்வார்கள். சிலர் மனதை குதிர
ை என்பார்கள்.சிலர் குரங்கு என்பார்கள். சமீபத்தில் சதுரகிரிக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு வைத்தியர் ஒரு தகவலைச் சொன்னார். அதாவது இயற்கையாக வயதாகி இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாரும் பார்க்க முடியாதாம். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதற்குத் தெரிந்துவிடுமாம். அன்றிலிருந்து அந்தக் குரங்கானது ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளும் என்றார். எனக்கு அதிசயமாக இருந்தது. அந்த ஒருவாரமும் அது தவம் செய்யும் என்றார். இந்த தகவலைப் பற்றி எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கபும் என்றாரே அதுதான் எனக்கு பேரதிசயமாகப்பட்டது.
சித்தர்களும் நம் மனமாகிய குரங்கை வெளியே இறக்கி வைத்து, வெளியில் இருந்து தன்னை பார்க்கும் தியான முறையை குருமூலமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஐந்து தியான முறைகளைப் பற்றி பார்ப்போமா.
கேசரி, பூசரி, மத்திய லட்சணம், ஷண்முகீ, சாம்பவி . இது ஏதோ இனிப்பு வகைகளின் பெயரோ அல்லது இடத்தின் பெயரோ, நடிகையின் பெயரோ அல்ல இதுதான் அந்த தியான முறைகளின் பெயர்.
1 - கேசரி - யோகி தனது இரு கண்களின் கருவிழிகளை நடுவில் நிறுத்தி, அசையாமல் மேல் நோக்கி, அருள் வெளியாகிய சிதம்பரத்தை மனதில் நிறுத்தி பார்த்துக் கொண்டிருப்பது.
2- பூசரி - இதில் யோகியானவர் அசைக்காமல் இருகண்களின் கருவிழிகளால் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டிருப்பது.
3 - மத்திய லட்சணம் - இருகண்களையும் அரைப்பார்வையாக மூடிக் கொண்டு, அசையாமல் கருவிழிகளால் மூக்கின் மத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பது.
4 - ஷண்முகீ - இதில் யோகியானவர் தன் மூக்கு, கண்கள், வாய்,காது இவற்றை கைவிரல்களால் மூடிக் கொண்டு. வெளிப் பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பி, இருகருவிழிகளையும் அசையாமல் நடுவில் புருவ மத்தியில் நிறுத்தி பார்க்க வேண்டும்.
5 - சாம்பவி - சிதாகாசம் என்கிற சகஸ்ராரத்தில் மனதை நிறுத்தி இரு கண்களையும் மூடாமல் கருவிழிகளை மேல் நோக்கி பார்த்தபடி அசையாமல் சொக்கியிருப்பது. இதில் எல்லாமே நாம் உள்ளிருந்துதான் தியானம் செய்கிறோம் என்றாலும் மனமானது வெளியில் இருப்பதாக பாவித்துக் கொள்ள வேண்டும். எல்லாமே பழகப்பழக கைகூடும்.
இந்த சகஸ்ராரமே பிந்துஸ்தானம்.இதையே தேவலோகம் என்று சித்தர்கள் மறைபொருளாகக் கூறுவார்கள். இங்குதான் சோம்பானம் என்னும் தேவாமிர்தம் சுரக்கின்றது. கோவில்களில் தீர்த்தம் வழங்கப்படுவது இது சுரப்பதை நினைவில் கொள்ளவே. பெரிய கோவில்களில் ஏழு பிரகாரங்கள் வைத்துக் கட்டப்படுவது, மனித உடலில் உள்ள முக்கியமான ஏழு ஆதாரங்களைச் சுட்டிக் காட்டவே. இதெல்லாமே நமக்கு சித்தர்கள் அருளியது.
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13
பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. அது என்ன அடைப்பு ? அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான். தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி,6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும். இதில் அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவார்கள். கடந்த காலங்களில் கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது.27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது. இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு, கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சிபெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.
இதுகுறித்த தகவல்கள் தொடரும்.......
இதுகுறித்த தகவல்கள் தொடரும்.......
சிவவடிவங்களில் மிக சிறப்புடைய ஐந்து மூர்த்தங்கள்
திருவெண்காடு அருகில் மேலப்பெரும் பள்ளம் என்ற சிவதலம் உள்ளது. இங்குள்ள பிட்சாடனர் வீணை ஏந்திய கோலத்தில் உள்ளார்.
இவ்வடிவினைக் கண்ட திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில்
“முறித்த தொரு தோல் உடுத்து முண்டஞ் சாத்தி
முனி கணங்கள் புடைசூழ முற்றந் தோறும்
தெறித்த தொரு வீணையராய்ச் செல்வார்’
சிதம்பரத்திலும், திருச்செங்காட்டங்குடியிலும் பிட்சாடனருக்கு என தனிச் சந்நதிகள் உள்ளன.
பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
நடராஜர் - சிதம்பரம்
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
சோமாஸ்கந்தர் - திருவாரூர்
கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி
ரிஷபாரூடர் - வேதாரண்யம்
சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
காமசம்ஹாரர் - குறுக்கை
காலசம்ஹாரர் - திருக்கடையூர், நாகை
சலந்தராகரர் - திருவிற்குடி
திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் - திருப்பறியலூர் - நாகை
கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர்)
கங்காளர் - திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்)
சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
ஏகபாதமூர்த்தி - மதுரை
லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
சுகாசனர் - காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)
Subscribe to:
Comments (Atom)